இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (வயது 89) காலமானார். சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பும், உடல்நல பாதிப்பும் இருந்த நிலையிலும் கடைசி வரை கட்சி, சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார்.
இவர் தமிழ் சமூகத்தை சாகும்வரை தட்டி எழுப்புவேன் என ஆவேசமாக முழங்கியவர் ஆவார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பேச்சுக்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்த தா.பாண்டியன் எட்டு நூல்கள், ஆறு மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். வகுப்புவாதத்தை காலூன்ற விடமாட்டேன் என்று சமீபத்தில் கூட இடி முழக்கமாக முழங்கியவர் ஆவார்.