நேற்று குடியரசு தின விழாவின் நிறைவாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. மேலும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர்.
இதன் காரணமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசு “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது கட்டாயம் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்” என்று அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிக்கவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தாய், தந்தை, ஆசானுக்கு
எழுந்து நிற்பீர்களா? மாட்டீர்களா?
அது சட்டமன்று; அறம்.தமிழ்த்தாய் வாழ்த்தும்
அப்படியேசட்டப்படியும்
எழுந்து நிற்கலாம்;
அறத்தின்படியும்
எழுந்து நிற்கலாம்.இரண்டையும்
மறுத்தால் எப்படி?தமிழ்த்தாய் மன்னிப்பாள்;
சட்டம்…?— வைரமுத்து (@Vairamuthu) January 27, 2022
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்தது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.