நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். இசைத்தட்டுக்களை கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தை வாய்ப்பாட்டாக பாட வேண்டும்.
தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை நெறிப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி அரசு அலுவலகங்கள், கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.