தமிழகத்தில் வன்கொடுமையைத் தடுப்பதற்கு நாம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எனினும் ஆங்காங்கே சில சம்பவங்கள் தலைதூக்கி வருகிறது. இதனால் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக் கேற்றவாறு வழக்கப்பட்டு வந்த இழப்பீடு இப்போது உயர்த்தி வழங்கப்படுகிறது. இது குறித்த வழக்குகளில் 60 தினங்களுக்குள் விசாரணையை முடிப்பதற்குத் தலைமைச் செயலாளர் தலைமையில் நடத்தப்படும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டங்களில் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலில் பேசியதாவது, சுதந்திரதினம் உட்பட முக்கியமான நாட்களில் இதுவரையிலும் நடந்து வந்த சமபந்திபோஜனம், இனி சமத்துவவிருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும். இதையடுத்து ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களின் இன்னல்களை களையவும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், வன்கொடுமைகளை நம் அரசு இரும்புக் கரம் கொண்டு தடுக்கும். ஒரு பக்கம் சமத்துவபுரம், மற்றொரு பக்கம் “சமூகத்தில் அனைவரும் சமம்” எனும் கோட்பாட்டை சட்டத்தின் மூலமாகவும் விழிப்புணர்வு பரப்புரைகள் வாயிலாகவும் மேற்கொள்ளும் நம் அரசின் செயல்பாடுதான்.
இன்றைய சூழலில் இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய “திராவிட மாடல்” என்பதை நான் பெருமையுடன் பதிவு செய்கிறேன். இந்த மாடலானது அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் குரல் ஆகும். மேலும் அவர்களது உரிமைகளை பெற்றுத்தரும் குரல், தோளோடு தோள் நின்று அவர்களைப் பாதுகாக்கும் குரல் ஆகும். அவர்களது வாழ்வியல் பொருளாதார முன்னேற்றத்துக்கு நம் அரசு எப்போதும் துணையாக நிற்கும்” என்று அவர் பேசினார்.