Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவின் பால் லாரிகளை இயக்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ம் ஆண்டுடன் முடிவடைந்ததை அடுத்து ஒப்பந்தத்தை அரசு நீட்டிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் சத்துணவு டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்துக்கு முழு ஒப்பந்ததையும் வழங்கப்போவதாக தகவல் வெளியானது. இதனை கண்டித்து தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் 16ம் தேதி அதிகாரிகளுடன் ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஆவின் டேங்கா் லாரிகளுக்கான புதிய விலைப்புள்ளி ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரிக்கை வைத்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எடுக்கவில்லை.

இதனால் லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களாக நடந்த போராட்டம் காரணமாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பால் சப்ளையை அதிகாரிகள் சமாளித்து வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

Categories

Tech |