Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைப்பு”…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் அவைத்தலைவர் அப்பாவு ஒத்திவைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மொத்தம் 6 நாட்கள் அலுவல்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளும், ஆளும் தரப்பின் பதிலடி விளக்கமும் என காரசாரமாக நடைபெற்றது.

Categories

Tech |