தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்சை நியமித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.