மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை தேர்வு செய்துள்ளது.
நாட்டில் நீர் மேலாண்மையில் சிறப்பாக விளங்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு விருது பட்டியலை அறிவித்துள்ள நிலையில் இவ்விருதினை தமிழக அரசு பெற்றுள்ளது.
மத்திய நீர்வள அமைச்சகம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பில்,
நீர் மேலாண்மையில் தென்னிந்தியாவில் ஆறுகளை மீண்டும் உயிர்ப்பிக்க செய்வதில் சிறந்த மாவட்டமாக வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்களையும், அதேபோல் நீர் மேலாண்மையை சிறப்பாகக் கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை மாநகராட்சியும் தேர்வாகியுள்ளது.
நீர்நிலைகளை பாதுகாப்பதில் சிறந்த சிறந்த மாநிலமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் அடுத்த இடத்தை பெற்றுள்ளது.
மேலும் நீர் மேலாண்மையை கற்பித்து மாணவ-மாணவிகளை ஊக்குவித்த பள்ளிகளுக்கான விருது பட்டியலில் புதுச்சேரியில் இந்திராகாந்தி அரசு பள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது.
நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் முதல் பரிசையும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சக்தி நாதன் கணபதி பாண்டியன் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளனர்.