Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில்…. மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம்..!!!!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் எம்எஸ்சி மற்றும் இதழியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில் எம்எஸ்சி படிப்புக்கு 16 இடங்களும், நோய் பரவியல் படிப்புக்கு 4 இடங்களும் காலியாக இருக்கிறது. அதன் பிறகு எம்எஸ்சி படிப்புக்கு, MBBS, PDS, ஆயுஷ் படிப்பு, இளநிலை கால்நடை அறிவியல், பிஎஸ்சி நர்சிங், பிபிடி, பிஓடி,‌ பி.பார்ம், பிஇ‌ (சிவில்), எம்எஸ்சி (லைஃப் சயின்ஸ்) போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோன்று நோய் பரவியல் படிப்புக்கு, MBBS, PDS, ஆயுஷ் படிப்பு, இளநிலை கால்நடை அறிவியல், எம்பிடி, எம்ஓடி, பி.பார்ம், எம்எஸ்சி (லைஃப் சயின்ஸ்) போன்றவைகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதன் பிறகு பொது சுகாதார இதழியல் தொடர்பான 1 வருட பட்டய படிப்பும் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த இதழியல் பட்டய படிப்பில் 8 இடங்கள் காலியாகவுள்ளது. இதில் சேர விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்புடன், இதழியல் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள் http://www.tnmgrmu.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் மின்னஞ்சல் முகவரி அல்லது 044-22200713 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இந்த படிப்புகளில் சேர விரும்புபவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |