தலைமைச் செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 1965-ம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இதனால் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றது. கடந்த 1967-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஜூலை 18-ஆம் தேதி அன்று மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அரசாங்கம் அறிவித்தது.
இந்த நாள் எல்லை போராட்ட நினைவு நாளாக தான் அமையும் எனவும், தமிழ்நாடு தினமாக அமையாது எனவும் பலர் கூறினர். இதன் காரணமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு தினம் என அறிவிக்கப்பட்ட ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு தினவிழ நாளாக அறிவித்தார். அதன்படி இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.