Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாடு நாள்” தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இன்று….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!!!

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந் தேதியை(இன்று) தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அன்றைய நாளில் தமிழ்நாடு உருவான வரலாறு தொடர்பான சுவரொட்டிகளை பள்ளிகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |