Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு நீரின் தரம் என்ன?…. ஆய்வில் வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!!

நாடாளுமன்றம் மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது மத்திய ஜல்சக்திதுறை இணை மந்திரி பிஸ்வேஷ்வர் துடு, கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவற்றில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் வாயிலாக நாடு முழுவதும் நிலத்தடி நீரின் தரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் முடிவுகளின் அடிப்படையில் 23 மாநிலங்களைச் சேர்ந்த 370 மாவட்டங்களில் ப்ளூரைடு (Fluoride) அளவு அதிகமாக உள்ளதாகவும், 21 மாநிலங்களைச் சேர்ந்த 152 மாவட்டங்களில் ஆர்சனிக் (Arsenic) அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, சேலம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, திருச்சி, நெல்லை, திருப்பூர், வேலூர், கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் ப்ளூரைடு அளவு அனுமதிக்கப்பட்டதை விட லிட்டருக்கு 1.5 மில்லி கிராம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியலூர், கடலூர், நாகை, ராமநாதபுரம், திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஆர்சனிக் அளவி லிட்டருக்கு 0.01 மில்லி கிராம் அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |