திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் வலுத்துவருகிறது. அதனால் பாஜக அரசு பிடிவாதம் பிடிக்காமல் அச்சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். போராட்டத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் இணைந்து போராடுவது ஆறுதல் அளிக்கிறது.
கேரளா, புதுவை, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அந்தந்த மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதேபோல, தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், தமிழ்நாடு பட்ஜெட் அரைக்கைச் சட்டை போல் உள்ளது” என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்