Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை: ரூ.45,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு….. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க…..!!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் அடிப்படையில் இல்லம்தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், என் பள்ளி என் பெருமை ஆகிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்படும் இது போன்ற திட்டங்களுக்கு ஆதரவளிக்க, தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து அரசுடன் பணியாற்ற தகுதியும், ஆர்வமும் இருப்பவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திட்டத்தின் பெயர்

# TamilNadu Education Fellowship

1.பணியின் பெயர்

Senior Fellows

காலிப்பணியிடங்கள்

# 38 இடங்கள்

மாத சம்பளம்

# ரூபாய் 45,000

விண்ணப்பதாரர் தகுதி

# ஏதாவது ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவும். அத்துடன் உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்கவும். சமூகஊடங்களைப் பயன்படுத்த தெரிந்திருக்கவும்.

பணிகள்

# விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், திட்ட ஆய்வுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தல், திட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான பயிலரங்கை ஏற்பாடு செய்தல், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு டிஜிட்டல் கருவி வாயிலாக உதவுதல் ஆகிய பணிகளில் ஈடுபடவேண்டும்.

2.பணியின் பெயர்

# Fellows

காலிப்பணியிடங்கள்

# 114 இடங்கள்

மாத சம்பளம்

# ரூபாய் 32,000

விண்ணப்பதாரர் தகுதி

# ஏதாவது ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவும். மேலும் உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 2 வருடம் பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணிகள்

# அரசின் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்த துணைபுரியவும். மேலும் திட்டங்களை சமுதாயஅளவில் கொண்டு செல்ல பல தொலைதொடர்பு உத்திகள் எடுக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்துவதற்கு துணைபுரிய வேண்டும்.

# அரசுப்பள்ளி தேவைகளை அடையாளம் காணுதல், கல்வித்தேவைகளை நிறைவேற்றுதல், கல்வித் தரத்தை உயர்த்துதல் ஆகிய முக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு டிஜிட்டல் கருவிகள் துணையுடன் உதவவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் தகுதி, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அத்துடன் விண்ணப்பத்தாரர் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத, படிக்க தெரிந்திருக்கவும். பணி முழுதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

www.tnschools.gov.in எனும் இணையதள முகவரியில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவத்திற்கான லிங்க் மற்றும் கூடுதல் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்

# விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பின் பூர்த்தி செய்து வரும் 30ஆம் தேதிக்கு முன்னதாக கிடைக்கும்படி விண்ணப்பிக்கலாம்.

 

Categories

Tech |