Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பாரபட்சம் பார்க்கிறது…. சரமாரியாக கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்….!!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட மாற்றுத் திறன்  மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும்  பயிற்சியாளர்கள் ஊதிய உயர்வு  வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணியாற்றும் பிற பணியாளர்களுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ஆம் தேதியும், இந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ஆம்  தேதியும்   30 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டது.

மேலும் அவர்களுக்கு போக்குவரத்துப் படி  3 ஆயிரமாக   உயர்த்தப்பட்டது. ஆனால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பணியாளர்களுக்கு மட்டும் ஊதியம் இதுவரை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் இரு பிரிவினர் இடையே பாகுபாட்டுடன்  நடந்து கொள்வது நியாயம் இல்லை. மேலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது  என அவர் அந்த அறிக்கையில்  கூறியுள்ளார்.

Categories

Tech |