தமிழகத்தில் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வின் புதிய அட்டவணையை சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சார்பு ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வின் புதிய அட்டவணையை சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியீட்டுள்ளது. புதிய அட்டவணையின் படி, பிப்ரவரி 23, 24, 25, 26, 27, மற்றும் மார்ச் 1, 2 ஆகிய ஏழு நாட்கள் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.