Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் ரூ 15,00,000 பறிமுதல்!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் ரூ 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார்.. ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் 2019ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

Home

இந்த சூழலில் பணியில் இருந்து வரும் வெங்கடாசலம் விதிமுறை மீறி சொத்து சேர்த்ததாக வந்த தகவலின் அடிப்படையில், இன்று காலை முதல் சென்னை கிண்டியில் உள்ள அலுவலகம் மற்றும் வேளச்சேரியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 10க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தி வந்தனர்..

இந்நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் ரூ 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும் தொகையை வெங்கடாச்சலம் லஞ்சமாக பெற்றதாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |