தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் அமைச்சர் தங்கமணி இதுபற்றிய செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் மின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணையை திரும்பப் பெறப்படுகின்றது. மின்வாரியத்தின் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தொழிற்சங்கங்களால் திரும்பப் பெறபட்டால், ஐந்து நாட்களுக்குள் 10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் கொடுக்கப்படும்.
தொழிற்சங்கங்கள் வழக்கை வாபஸ் பெற்றால், பத்தாயிரம் பேரை உடனடியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். மின்வாரிய ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு முன் வருவதாக தெரியவில்லை. போராட்டம் நடத்தாமல் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். மேலும் தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.