Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் ஜூன் 14 அன்று பள்ளிகள் திறப்பு…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க பட்ட நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் மாணவர்களுக்கு 2021-2022 கல்வி ஆண்டுக்கான பாடத்தையும் தொடங்க உள்ள நிலையில் ஜூன் 14 ஆம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்களை பழக வேண்டி உள்ளதாலும், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |