Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து 5 நாட்கள்…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் 25ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 14 மாநகராட்சிகளில் உள்ள 829 வார்டுகளில் 23,838 பணியாளர்கள், 121 நகராட்சிகளில் உள்ள 3,497 வார்டுகளில் 4591 பணியாளர்கள், 858 பேரூராட்சிகளில் 28,624 பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இன்று முதல் 25ஆம் தேதி வரையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெறும். 25ஆம் தேதிக்குள் முழுமையாக சாக்கடை கால்வாய்கள் தூய்மை படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |