தமிழகத்தில் 7,296 செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் இடங்கள் மதிப்பின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுவர். யாரும் எந்த ஒரு இடைத்தரகரையும் நம்ப வேண்டாம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். புதிதாக ஏற்படுத்தப்பட்ட உள்ள செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர் பணியிடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நிரப்பப்பட உள்ளது.
எனவே யாரும் எந்த ஒரு இடைத்தரகரையும் நம்ப வேண்டாம். இதில் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பணி நியமனங்கள் இருக்கும். மனிதாபிமான அடிப்படையில் 7,296 பேருக்கும் 20 மார்க் வழங்கப்படும். படிப்பிற்கு ஒரு மார்க், பணியாற்றிய அனுபவத்திற்கு ஒரு மார்க், வசிப்பிடத்திற்கு ஒரு மார்க், கொரோனா காலத்தில் பணியாற்றுவதற்கு 20 மார்க் என 100 மார்க்கில் அவர்கள் எடுக்கும் மார்க்க அடிப்படையில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.