தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 80க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு வனத்துறையின் தலைமை வனப்பாதுகாவலராக அசோக் உப்ரேதி IFS நியமிக்கப்பட்டுள்ளார். வனத் துறையின் தலைமை வன உயிர் காப்பாளராக சேகர் குமார், சுற்றுச்சூழல் துறை இயக்குனராக ராஜேஸ்வரி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்தை சிறப்பு செயலாளராக ஜெயந்தி IFS நியமிக்கப்பட்டுள்ளனர்.