தமிழ்நாடு வனத்துறையில் (TN Forest) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசு துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வனத்துறை காலிப்பணியிடங்கள்:
Project Assistant (DNA) – 01
Project Assistant (Health Monitoring) – 01
Project Assistant (STR, Delineating) – 02
Project Assistant (SDMA, Hematological) – 02
Project Assistant (Assessment & Identification) – 02
TN Forest வேலைவாய்ப்பு விவரங்கள்:
பணி : Project Assistant (DNA) – 01
சம்பளம்: மாதம்: ரூ.20,000/-
தகுதி: பயோடெக்னாலஜி/ மூலக்கூறு உயிரியல்/ மரபியல்/ மரபணு பொறியியல் ஆகியவற்றில் முதுகலை பட்டம், எம்.எஸ்சி, எம்இ/ எம்டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி : Project Assistant (Health Monitoring) – 01
சம்பளம்: மாதம்: ரூ.20,000/-
தகுதி: வனவிலங்கு உயிரியல்/ விலங்கியல் துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
பணி : Project Assistant (STR, Delineating) – 02
சம்பளம்: மாதம்: ரூ.25,000/-
தகுதி: வனவிலங்கு உயிரியல்/ விலங்கியல் துறையில் முதுகலை பட்டம், ME/ M.Tech in Biotechnology/ Molecular Biology/ Genetics/ Genetic Engineering முடித்திருக்க வேண்டும்.
பணி : Project Assistant (SDMA, Hematological), Project Assistant (Assessment & Identification) – 06
சம்பளம்: மாதம்: ரூ.25,000/-
தகுதி: Masters Degree, M.Sc in Wildlife Biology/ Zoology முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் விண்ணப்பிக்கும் நபர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பபடும்.
வயது வரம்பு:
தமிழ்நாடு வனத்துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-06-2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பப்படிவத்தை Sd/ – A. உதயன், கூடுதல் முதன்மை தலைமைப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர், AIWC (R,T & E), வண்டலூர், சென்னை – 600048 என்ற முகவரிக்கு 22-ஜூலை-2022 அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.
https://drive.google.com/file/d/192lT4Vb0-jgVqdy1MkI4uMvbRCECEZMK/view