Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் வீடு…. மாவட்ட ஆட்சியரின் சூப்பர் அறிவிப்பு….!!!!

விற்பனைப் பத்திரம் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் ஓசூர் வீட்டு வசதி பிரிவில் தர்மபுரி மாவட்டத்தில் வீட்டுமனைகள்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முழு பணம் செலுத்தி விற்பனை பத்திரம் பெறாதவர்கள் இருக்கின்றனர்.

இவர்களுக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை விற்பனைப் பத்திரம் வழங்குவதற்கான முகாம் நடைபெற இருக்கிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு விற்பனை பத்திரம் பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |