2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நெல் ஜெயராமன் மரபுசார் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் 20,000 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும் கடந்த 6 மாதங்களில் 59 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரகங்களின் விதை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.