Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு”… பங்குனி உத்திரம் திருநாள் வாழ்த்து… அமித்ஷா டுவிட்…!!!

தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு பங்குனி உத்திரம் திருநாள் வாழ்த்துக்களை அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திரம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் கோவிலில் ஒன்று திரண்டு முருகனை வழிபட்டு வருகிறார்கள். ஆனால் சிலர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலேயே முருகனை வழிபாடு செய்து வருகின்றனர். அதுமட்டுமன்றி பெரும்பாலான கோவில்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பங்குனி உத்திரத்திற்கு வாழ்த்து தெரிவித்து அமைச்சர் அமித்ஷா தமிழில் டுவிட் செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்! இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சி செலுத்திட இந்த புனித நாளில் எனது அன்பான பங்குனி உத்திரம் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிவேல்! வீரவேல்! என்று கூறியுள்ளார்.

Categories

Tech |