இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாடும் தமிழக வீரர் நடராஜனுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி, ஆஸ்திரேலியா தலைநகரான கான்பெர்ராவில் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக வீரர் நடராஜன், இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணிக்காக முதல் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் நடராஜன் விளையாடுவதால் பல தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக தனது முதல் வெற்றி பயணத்தை தொடங்கி இருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும், தனது திறமையால் தாய் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் அவரின் சாதனை பயணம் தொடரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.