Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டிற்கு 785 மெட்ரிக்டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது…. மத்திய அரசு கணிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜனுக்கு நாடு முழுவதும் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் மாநிலங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு குறித்து மத்திய அரசு கணித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி 320 மெட்ரிக் ஆக்ஸிஜன் தேவைப்படும் எனவும், அது கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. வரும் 30ஆம் தேதியை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு 465 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |