Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

பள்ளு மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்த காரணத்தினால் பள்ளிகள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் சீண்டல்களிலிருந்து மாணவியரை பாதுகாக்க உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதற்காக அனைத்து பள்ளிகளிலும் பெண் அதிகாரி, சமூக பாதுகாப்பு அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் அடங்கிய குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் புகார் பெட்டி அமைத்தல், அருகாமையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்களை பள்ளி வளாகத்தில் வெளியிடுதல் போன்ற பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |