தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற பிளஸ்-2 மாணவி கடந்த 9-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் “பள்ளி நிர்வாகம் தனது மகளை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சித்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை திட்டி விடுதி கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் பயங்கர மன உளைச்சலுக்கு ஆளான லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்” என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவமானது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு “தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமே கிடையாது. எம்மதமும் சம்மதமே, மாண்புமிகு முதல்வரின் மனநிலையும் அதுதான்” என்று கூறியுள்ளார்.