Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் உயர்கிறது மின் கட்டணம்…. பொது மக்களுக்கு கடும் ஷாக்….!!!!

மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின்வாரியத்திற்கு அறிவுறுத்தியிருப்பது   பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மின்வாரியம் கடனில் இருந்து மீள்வதற்காக மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின்வாரியத்தில் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “ஏற்கனவே வேலையின்மை, பெட்ரோல், டீசல் விலை வெங்காயம் , தக்காளி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மின் கட்டணத்தை உயர்த்துவது மேலும் அவர்களை அவதிக்குள்ளாக்கும்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின்வாரிய கடனை மக்கள் மீது சுமத்துவது எப்படி நியாயமாகும்.  மின் வாரியம் கடன் சுமையில் இருப்பது உண்மை என்றால் அதற்கு மக்கள் பொறுப்பு கிடையாது. மின்சாரமும், நிலக்கரியும் தனியாரிடம் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வது, பராமரிப்பதில் நிர்வாக சீர்கேடு போன்ற பல்வேறு அம்சங்களில் நிலவும் ஊழல் போன்றவையே காரணம். இவற்றை தடுக்காமல் மக்கள் மீது மின் கட்டண உயர்வை செலுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மின் கட்டணம் உயர்த்தும் தன் அறிவுறுத்தலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.  மேலும் மின் மசோதா 2021 திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசையும், மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என மாநில அரசையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். மக்கள் தங்களுடன் உறுதியாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |