மக்கள் ஒத்துழைத்தாள் 100% தடுப்பூசி செலுத்திய மாநிலத்தில் தமிழகம் இடம்பெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அடையார் கஸ்தூரிபா நகரில் நடைபெற்ற வரக்கூடிய 7-வது தடுப்பூசி முகாமில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக முழுவதும் 5 கோடியே 73 லட்சத்து 901 பேருக்கு நேற்று இரவு வரை தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டும்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடப்பட்டு வருவதாக மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் தடுப்பூசியில் ஆர்வம் காட்டுவதில் மகிழ்ச்சி அளிப்பதாகவும், 7-வது தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெற்று வருவதாகவும், அவர் தெரிவித்திருக்கிறார். தமிழக அரசிடம் 59 லட்சம் தடுப்பூசி தற்போது கையிருப்பில் உள்ளது என்றும் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னைக்கு வந்திருக்கிறது.
எனவே 7 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும் முதல் தவணை கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அனைத்து முகாம்களிலும் 2-வது தவணை கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். அதே போன்று 48 லட்சம் பேருக்கு 2-வது தவணை கோவீஷுல்டு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. 53 லட்சம் கோவில் கோவீஷல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் நவம்பர் மாதத்தில் ஒன்றிய அரசிடமிருந்து ஒரு கோடியே 40 லட்சம் தடுப்பு ஊசி வர உள்ளதாக மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் 400 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகவும், 4 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், அவர் தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் 21,936 பணியாளர்களும், சென்னையில் 3,567 பணியாளர்களும் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் 168 கொசு ஒழிப்பு வாகனங்களும் 215 கைத்தெளிப்பான்களும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.