மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “இந்தியாவை பொருத்தவரை டெல்லி, தெலுங்கானா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் முதல் குரங்கம்மை பாதிப்பு என்றவுடன் தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அமெரிக்காவிலிருந்து கிருஷ்ணகிரி வந்த சிறுவனுக்கும் மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு சிறுவனுக்கும் குரங்கு அம்மை போன்று அறிகுறிகள் இருந்தது. ஆனால் பரிசோதனை செய்யப்பட்டதில் குரங்கு அம்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.