Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு…… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. பாதிப்பு ஏற்பட்டால் கட்டாயம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். குரங்கு அம்மை வரவே வராது என்று கூறவில்லை. 77 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ளது.

எனவே தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |