அரக்கர்கள் வம்சத்தை சேர்ந்த ராவணனின் தங்கை சூர்ப்பனகைக்கு நாமக்கல் அருகே கூட வேலம் புத்தூர் என்ற ஊரில் கோவில் அமைந்துள்ளது. மூன்று வாசல்கள் கொண்ட இந்த கோயிலில், தினமும் வடக்கு, கிழக்கு திசை வாசல்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. கோயில் நடத்தப்படும் விழாக்காலங்களில் மட்டுமே மேற்கு திசை வாசல் திறக்கப்படுகிறது. வடக்கு வாசல் முன்பாக 25 அடி உயரத்திலும், வடக்கு வாசலுக்கு செல்லும் வழியில் 10 அடி உயரத்திலும் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் கருவறை முன்மண்டபம் 16 தூண்களால் எழுப்பப்பட்டுள்ளது. முன் மண்டபத்தை ஒட்டியுள்ள ஊஞ்சலில் விழாக்காலங்களில் அம்மனை ஊஞ்சலில் வைத்து, மக்கள் பாட்டுப்பாடி வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. இந்தியாவிலேயே சூர்ப்பனகை அமைந்துள்ள ஒரே கோவில் இது தான். 27 நட்சத்திரக்காரர்களும் வணங்கத் தகுந்த சிறப்பு தலமாகவும் இக்கோவில் உள்ளது. இது அழியா இலங்கை அம்மன் கோவில், ஆயா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.