பெரம்பலூர் அருகே 12 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த டைனோசரின் முட்டைகள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள குன்னம் பெரிய ஏரியில் நேற்று சில பணியாளர்கள் மணி எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அபௌட் எனப்படும் கடல்வாழ் நத்தைகளின் படிமங்கள் சிதைவுற்ற நிலையில் அங்கு கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி அந்த ஏரியில் டைனோசர் முட்டை போன்ற பெரிய உருண்டை வடிவிலான படிமங்களும் இருந்துள்ளன. புவியியல் ஆய்வாளர் அதனை வந்து பார்வையிட்டார். அப்போது அது டைனோசர் முட்டையா? இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் ஆய்வாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அங்கிருந்த கடல் வாழ் நத்தைகளின் படிமங்கள் மற்றும் உருண்டை வடிவிலான படிமங்கள் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் கைப்பற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி குன்னம் கிராமத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்தப் படிமங்களை ஆய்வகத்தில், அங்குள்ள பள்ளிகளிலும் சேகரித்து உள்ளூர் அளவிலான காட்சியகங்கள் ஏற்படுத்தி பாதுகாப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த படிமங்கள் எடுக்கப்பட்ட பகுதிகளை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த டைனோசர் முட்டைகள் மாமிசம் மற்றும் இலைகளை மட்டுமே உண்ணும் சைவ டைனோசரின் முட்டைகள் ஆக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு இருந்தால் அது 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கும். டைனோசர்கள் 1.5 டன் வரை எடையும் 30 அடி நீளமும் கொண்டவை. பெரிய கால் தசைகள் கொண்ட டைனோசர்கள் மிகத் திறமையாக வேட்டையாடும் என்று தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.