Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் திருச்சி உட்பட 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்..!!

திருச்சியில் ரூ 655 கோடி மதிப்புள்ள 5,639 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், புதிய புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளியை சந்திக்க உள்ளேன். மக்களுக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க கூடிய மகத்தான திட்டம்தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரே ஆண்டில் ஒரு கோடி பேர் பயன் அடைந்துள்ளனர் என்றார்.

மேலும் பேசிய அவர், உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வழங்கக் கூடிய வகையில் தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன. அதில் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் தயாராகவே ஒலிம்பிக் அகாடமி என்றார்.

 

Categories

Tech |