வேளாண் துறையில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு வேளாண் துறை வாயிலாக 2 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள், புதுமையான கருவிகள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசலிக்க தமிழக அரசு திட்டமிட்டு நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறையும் தேர்வும்:
# இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் விவசாயிகள் முதலாவதாக கைபேசியில் உழவன் செயலி வாயிலாக தனது பெயரைப் பதிவு செய்ய வேண்டும். இதில் தகுதியுள்ள விவசாயிகளின் கண்டுபிடிப்புகளானது மாவட்டம் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு, பின் மாநிலக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
# இதையடுத்து மாவட்டம் அளவிலான தேர்வுக்குழுவில் வேளாண்இணை இயக்குநர், வேளாண்மை பல்கலை விஞ்ஞானி, முன்னோடியான விவசாயிகள் 3 பேர் போன்றோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
# விண்ணப்பங்கள் மாநிலக் குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு உள்ளூரின்வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு 1 விவசாயி மற்றும் வேளாண்இயந்திரம் கண்டுபிடிப்புக்கு 1 விவசாயி என்று தேர்வு செய்து, அவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.
குத்தகை சாகுபடி விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்:
# குத்தகை நிலத்தில் சாகுபடி செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவு கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். அதன்பின் கட்டணம் செலுத்திய ரசீதுடன் விண்ணப்பம் படிவத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
இயற்கை விவசாயிகளுக்கு பரிசு
இயற்கை வேளாண்மையில்சிறந்து திகழும் விவசாயிகளுக்கு முதலாவது பரிசு தொகையாக ரூபாய் 1 லட்சமும், 2-ம், 3-ம் பரிசாக முறையே ரூபாய் 60,000, ரூ. 40,000 வழங்கப்படும். அதேபோல் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு பரிசாக ரூபாய் 2 லட்சமும் வழங்கப்படவுள்ளது.
இதற்கான காலஅவகாசம் மார்ச் 18 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. குத்தகை நிலத்தில் சாகுபடி செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவு கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.