தமிழ்நாடு இளைஞர்களுக்கே 100% அரசுப்பணி எனவும், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தால் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும் எனவும், தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தால் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், போட்டித்தேர்வுகள் அனைத்திலும் எழுத்து தேர்வுகளிலும், தமிழ் மொழியை தகுதித் தேர்வாக கட்டாயமாக அரசு முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாட்டில் 90 லட்சம் இளைஞர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு இலவு காத்த கிளிபோல் காத்திருக்கும் நெருக்கடியான சூழலில், ஒன்றிய பாஜக அரசும், அதிமுக அரசும், போட்டிப்போட்டுக்கொண்டு தமிழகத்தில் உள்ள காலி பணியிடங்களை எல்லாம் வடமாநிலத்தாருக்கு வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதை இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியாது என 2019-ஆம் ஆண்டு மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.