மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடி வசூல் சாதனை படைத்தது. முதல் நாள் மட்டும் 80 கோடி வசூல் சாதனை படைத்தது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகைகள் காரணமாக இந்த வசூல் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.
உலகம் முழுவதும் இப்படம் ரூ.300 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. அதேபோல், ஆந்திராவில் ரூ.19 கோடி, கர்நாடகாவில் ரூ.17 கோடி, கேரளாவில் 18 கோடி, வட இந்தியாவில் 18 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ‘வலிமை’. ‘பீஸ்ட்’, ‘கேஜிஎஃப் 2’, ‘விக்ரம்’ வரிசையில்இப்படமும் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.