தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மிதமானமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, தென்மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.