பிரபல எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினியின் கணவர் கவிஞர், எழுத்தாளர், ஆன்மீகச் சொற்பொழிவாளர் என பன்முகத் தன்மை கொண்ட பால ரமணி காலமானார். இவருக்கு வயது 62. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கம்பராமாயணம் குறித்து ஆய்வுகள் செய்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். நூல்களையும் எழுதியுள்ளார். இதற்காக தமிழக அரசின் கம்பர் விருது மற்றும் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories