தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் சட்டமன்ற மேலவை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவருவதற்கான தீர்மானத்தை வரும் 13ஆம் தேதி கூட இருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வருவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற மேலவை கடந்த 1989ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது. அதன்பிறகு 2010 ஆம் ஆண்டே மீண்டும் கொண்டு வருவதற்கு முன்னால் முதல்வர் கருணாநிதி முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் முயற்சி கைகூடவில்லை. இதையடுத்து சட்டமன்ற கூட்டத்தொடரில் இதனை கொண்டு வருவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.