Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் முதல் முறையாக…. நவ.1ஆம் தேதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்  கிராம சபை கூட்டங்கள் போல் தமிழ்நாட்டில் முதல் முறையாக நகர சபை, மாநகர சபை கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நவ.1ஆம் தேதி ஒவ்வொரு வார்டிலும் நடைபெறவுள்ள நகரசபை, மாநகர சபை கூட்டங்களில் மக்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும் என்றும், சென்னை பம்மல் 6வது வார்டு மாநகர சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |