முதல்வராக முகஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வரும் போது இங்கு வேலை வாய்ப்புகள் பெருகும். அதன் மூலமாக மக்களின் வாழ்க்கை தரம் உயரும். அந்தவகையில் ஸ்டாலின் துபாய் பயணத்தில் 6 நிறுவனங்களுடனான ஒப்பந்தம் சுமார் 6,100 கோடி ரூபாய்க்கு முதலீடு திரட்டப்பட்டு உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
இந்த 6 நிறுவனங்களின் அதிகப்படியாக சுமார் 3,500 கோடி ரூபாய் முதலீட்டை கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலி இன்டர்நேஷனல் நிறுவனம் தான். சூப்பர் மார்க்கெட் தொழிலில் பிரம்மாண்டமாக நடத்தும் நிறுவனங்களில் உலக அளவில் முக்கியமானது லூலூ நிறுவனம்தான் எனக் கூறுகிறார்கள்.இன்றைய தினம் ஐக்கிய அரபு நாடுகளில் மட்டுமல்லாமல், அமெரிக்கா, தென் ஆப்ரிகா, சீனா, ஸ்பெயின், இந்தோனேசியா, மலேசியா என உலக அளவில் 22 நாடுகளில் சுமார் 230 லூலூ ஹைபர் மார்கெட்டுகள் உள்ளன. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் மொத்தம் 57,000க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
நிறுவனத்தின் மொத்த மதிப்பு 56,500 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் இரு இடங்களிலும், சமீபத்தில் கர்நாடகாவிலும் கிளை பரப்பியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கால் பதிக்க தயாராகிவருகிறது. இந்நிலையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படும் நிலையில் அதுகுறித்தும் விசாரித்தோம். 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் கிடைத் திறக்கும் லூலூ நிறுவனம் மூலமாக வேலைவாய்ப்பு உருவாகும் என்றாலும் கீழ்மட்ட பணிகளில் மட்டுமே பலரும் பணி அமர்த்தப்படுவார்கள்.
அதிலும் பொருட்களை எடுத்து வருவது, அடுக்குவது, சுத்தம்செய்வது, கணக்குகள் பார்ப்பது போன்ற வேலைகளை அதிகம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தமிழ்நாட்டின் உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து அதற்கேற்றவாறு வேலை வாய்ப்புகளை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். எனவே தற்போது இது போன்ற வேலைகளுக்கு தமிழ்நாட்டிலிருந்து வட இந்தியர்களை பணியமர்த்த படுகிறார்கள். நாளை லூலூ ஹைபர் மார்க்கெட் வந்தாலும் அந்த வேலைகளும் வட இந்தியர்களுக்கு தான் செல்லும்.
அதனால் இங்கு பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பட்டப் படிப்புகளை முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள், தனது படிப்புக்கு தொடர்பில்லாமல் கிடைத்த வேலைகளை செய்து வரும் இளைஞர்கள் போன்றவற்றை கணக்கிட்டு அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும். தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும் என கூறுகிறார்கள் தொழில் துறையை சேர்ந்தவர்கள்.