Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் வெறும் 1060 தடுப்பூசிகள் தான் இருக்கு…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பை பற்றி மக்களிடம் தெரிவிக்க கூடாது என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால் உண்மை நிலையை மக்களிடம் தெரிவிப்பது தான் சரியாக இருக்கும். தற்போது தமிழகத்தில் 1060 தடுப்பூசிகள்தான் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையடுத்து 18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட ஒரு செலுத்துவதற்காக 3.65 லட்சம் கோவிஷில்டு தடுப்பூசிகள் இன்று மாலை சென்னை வர உள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |