சென்னை மாநகரில் 100 மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. ஜெர்மன் வங்கியின் நிதியுதவியோடு இந்த திட்டத்தை செயல்படுத்த டெண்டரை போக்குவரத்துத் துறை சார்பில் நடத்தப்படும் சாலை போக்குவரத்து நிறுவனம் கோரியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக 100 மின்சார பேருந்துகளை வாங்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
34 பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 2023 முதல் இந்த பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். டெல்லி, மும்பை, புனேவை தொடர்ந்து சென்னையில் மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.