தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் படிப்புகளை பயிற்றுவிக்க யுஜிசி அனுமதி அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா, காமராஜர், சாஸ்திரா பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 11 உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் படிப்புகளில் மாணவர்கள் சேரலாம். BCA, BBA, B.Com, MCA, MBA, M.Sc உள்ளிட்ட 80 வகையான படிப்புகள் ஆன்லைனில் கற்க ஜூலை முதல் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன் படிப்புகளை கற்றுத்தர உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கையை உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.