Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 110 ஆண்டுகளில் இல்லாத பெருமழை…… Record….! வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. அதிலும் தென் தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது .நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது. வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதாக வானிலை எச்சரித்து வருகின்றது. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஆகஸ்ட் மாதத்தை பொருத்தவரை கடந்த 110 ஆண்டுகளில் இல்லாத பெருமழையை தமிழகம் இந்த ஆண்டு கண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்திற்கான சராசரி மலையளவு 9 சென்டிமீட்டர். ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 17 சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளது. இதற்கு முன்பு 1909ஆம் ஆண்டு தான் இவ்வளவு மழை பெய்ததாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்து தற்போது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவ்வளவு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அதிலும் தமிழகத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் 292 சதவீதம் அதிக மழையை பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |