நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு +2 பொதுதேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல மாநிலங்களில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகின்றது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பொது தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இடையே கருத்து கேட்பு நடத்தியதில் 60 சதவீதம் பேர் கட்டாயம் தேர்வை நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வில் குறிப்பிட்ட நிபந்தனையுடன் நடத்த ரத்து செய்யலாம் என்று கல்வியாளர் வசந்திதேவி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நீட் தேர்வு நடத்துவோம் என்று அறிவித்தால் தமிழ்நாடும் பிளஸ் டூ தேர்வு நடத்த வேண்டும். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.